0
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி பயிலும் கால்நடையாக நடந்து செல்லும் களுவங்கேணியைச் சேர்ந்த மாணவி கருணாகரன் தசோதாவிற்கு துவிச்சக்கரவண்டி இன்று வெள்;ளிக்கிழமை (18.11.2016) வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கத்தின் சொந்த நிதியிலிருந்து ரூபாய் 16,000 ஆயிரம் பெறுமதியான துவிச்சக்கர வண்டியை மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் வைத்து அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வில் அமைச்சரின் செயலாளர் தா. தங்கவேல், பொதுஜனத் தொடர்பு உத்தியோகத்தர் பா. சின்னத்துரை மற்றும் மாணவியின் உறவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

 
Top