0
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் என அரசாங்கத்தினால் கடந்த வருடம் உறுதியளிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் வரவுசெலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

இது ஏமாற்றமளிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவுசெலவுத்திட்ட தொடர்பான உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கடந்த வருடம் நிதியமைச்சரினால் ஆறு திட்டங்களுக்கான உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன. அடுத்த ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் அவற்றினை உள்ளடக்குவதாக தெரிவித்திருந்தார்.

இரண்டு கைத்தொழில் பேட்டைகளை அமைத்தல் மற்றும் நிலத்தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய நான்கு பாலங்களை அமைத்துதருவதாக உறுதியளித்திருந்தார்.

ஆனால் இந்த வரவுசெலவு திட்டத்தில் அந்த திட்டங்கள் சேர்க்கப்படாமை கவலையளிக்கின்றது. நல்லாட்சி மீது அந்த மக்கள் கொண்ட நம்பிக்கையினை இல்லாமல்செய்யும் செயற்பாடாகும்.

கடந்த காலத்தில் இயங்கிய சில தொழிற்சாலைகள் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. யுத்த காலத்தில் கூட இயங்கிய அந்த தொழிற்சாலைகள் இன்று முடக்கப்பட்ட நிலையில் உள்ளது.

Post a Comment

 
Top