கிரான் பிரதேசத்தின் அனேகமான அரச அலுவலகங்கள் புலிபாய்ந்தகல் கிராமத்திலேயே அமைந்துள்ளன. எனினும் ,புலிபாய்ந்தகல் பிரதேச மக்களும் அப்பகுதியிலுள்ள அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் புலிபாய்ந்தகல் கிராமத்திற்கு சென்று வருவதற்கான சீரான போக்குவரத்து வசதியின்மையால் நீண்ட காலமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ் விடயம் சம்பந்தமாக அப்பிரதேசத்தில் கடமையாற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் ,பொது அமைப்புகளும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, அவர் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் சாலை முகாமையாளரை தொடர்பு கொண்டு புலிபாய்ந்தகல் கிராமத்திற்கு போக்குவரத்து சேவைகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து குறித்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை போக்குவரத்து சபையின் சாலை முகாமையாளரும் உத்;தியோகத்தர்களும், அப்பிரதேசத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களையும் சந்தித்ததோடு வீதியின் நிலைமையினையும் பார்வையிட்டனர்.
அதனையடுத்து இன்று 16.11.2016 தொடக்கம் புலிபாய்ந்தகல் கிராமத்துக்கான பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இச்சேவை தற்போதைக்கு நாளொன்றுக்கு இரு தடவைகள் இடம்பெறும் எனவும் வீதி செப்பனிடப்பட்டதும் சேவை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக உடன் நடவடிக்கை எடுத்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலை முகாமையாளருக்கும் இப்பகுதி மக்களும் உத்தியோகத்தர்களும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

Post a Comment