0
சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலய கலை அரங்கில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வு மற்றும் திறமைசாலிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் ஏற்பாட்டில் நேற்று(08.11.2016) பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது, 2016ம் ஆண்டு சித்தாண்டி பிரதேசத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், சித்தாண்டி சிகண்டிஅறக்கட்டளை பன்னிசைப் பாடசாலை மாணவர்கள், கலைஞர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பெரும்பாலான திறமைசாலிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு ஆலயத்தின் கலை மேடையில் இடம்பெற்றது.

மேலும் தமிழ் தின போட்டிகளில் தேசிய மட்டம் சென்ற மாணவர்கள், சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த 2015ம் ஆண்டு சாதாரண தரத்தில் சிறந்தபெறுபேற்றினைப் பெற்ற மாணவர்கள், 2016ம் ஆண்டு ஐந்தம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 13 மாணவர்கள், வானவில் இளைஞனர் கழகத்தினால் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்பெற்ற மாணவர்கள் போன்ற பல்வேறுபட்ட திறமைசாலிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

குறித்த கௌரவிப்பு நிகழ்வின்போது கலை மேடையில் சிகண்டி அறக்கட்டளை பன்னிசைப் பாடசாலையின் மாணவர்களினால் கூத்து, நடனம், பன்னிசை, பிரசங்கம் என பல கலை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டது.

இந்த கௌரவிப்பு நிகழ்வுக்கு ஆலயத்தின் உற்சவ கால குருக்கள், கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்(கல்வி முகாமைத்துவம்) தினகரன் ரவி, பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

 
Top