வாழைச்சேனை கும்புறுமூலை பகுதியில் எரிசாராய உற்பத்தி நிலையம் அமைக்கக் கூடாது என்பதில் மாவட்டத்திலுள்ள மக்கள் தெளிவாக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த மாவட்ட அரசியல் வாதிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக எரிசாராய உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மக்கள் எதிர்க்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்க கூடாது.
இதேவேளை, வாழைச்சேனை பிரதேச பாடசாலை மாணவர்கள் மது மற்றும் புகைப்பிடித்தல் பாவனையில் அதிகம் ஈடுபடுகிறார்கள். இது தொடர்பாக பொலிஸார் விழிப்பூட்டல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனர்த்த சேவைகள் பிரிவு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேசசபை செயலாளருடன் இணைந்து வெள்ளம் ஏற்படும் போது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், உதவிகள் தேவைப்படும் போது எங்களோடு தொடர்பு கொண்டும் உதவிகளைப் பெற்று கொள்ள முடியும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை கும்புறுமூலை பகுதியில் மென்டிஸ் எரிசாராய உற்பத்தி நிலையம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும், குறித்த கூட்டத்தில், போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை பெற்று இரவு வேளையில் தொந்தரவு செய்வதாக பலர் முறைப்பாடு செய்வதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கல்குடா தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment