0

Image result for accidentமட்டக்களப்பு - பாலமீன்மடு பொதுச் சந்தைக்கு முன்னால் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த விபத்து நேற்று(25) நடந்துள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் திராய்மடு 2ஆம் குறுக்கைச் சேர்ந்த பாக்கியராசா கிருஷ்ணபிள்ளை(49), எஸ்.சிவகுரு(42) மற்றும் சகாயநாதன் றொசாந்த்(20) ஆகியோரே படுகாயமடைந்துள்ளார்கள்.



இச்சம்பவம் பற்றி மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

 
Top