இலங்கையின் நிரந்தர அபிவிருத்திக்கான ஐ.நாவின் 2030(இரண்டாயிரத்து முப்பது ) நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஆராய்வதற்கான 14 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கிழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த 17.11.2016 அன்று இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சபாநாயகர் கௌரவ. கருஜயசூரிய அவர்களால் இக்குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவிற்கு பிரதி சபாநாயகர் கௌரவ.திலங்க சுமதிபால தலைமை தாங்குகின்றார்.இக்குழுவில் வடமாகாணத்திலிருந்து கௌரவ. இ.சரவணபவன் அவர்களும்,மலையகம் சார்பாக கௌரவ.வி.எஸ் இராதகிருஸ்ணன் அவர்களும் இடம் பெறுகின்றனர்.
ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு ; கௌரவ.காமினி ஜெயவிக்கிரம பெரேரா,கௌரவ. நிரோசன் பெரேரோ,கௌரவ ரூவான் விஜயவர்த்தன, கௌரவ சுமித்தாஜெயசேன, கௌரவ அனுராதா ஜெயரத்ன,கௌரவ விமல் ரத்னாயக்க,கௌரவ அப்துல்லா மஃரூபீ,கௌரவ புத்திக்க பத்திரன,கௌரவ ரமேஸ் பத்திரன,கௌரவ நலிந்த ஜெதிஸ்ச,கௌரவ றோகினி குமார விஜயவர்த்தன ஆவர்.
நாளை முதலாவது கூட்டத் தொடர்(24/11/2016) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம் பெறவுள்ளது.

Post a Comment