கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கோப் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை(25.11.2016) தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை (27.11.2016 வரை முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் பிரதேச இளைஞர் முகாம் நடைபெற்றது.
பயிற்சி முகாமில் பல்வேறு தலைப்புக்களில் விரிவுரைகள் நடத்தப்பட்டதுடன் நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர்சேவை அதிகாரி அ.தயாசீலன் தலைமையில் இன்று மாலை நடைபெற்ற சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், வித்தியாலய அதிபர் சி.அகிலேஸ்வரன், கிராமசேவை உத்தியோகத்தர் சி.ஜீவிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூன்று தினங்களாக நடைபெற்ற இளைஞர் முகாமில் பிரதேசத்தினைச்சேர்ந்த நூற்றுக்குமேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment