இந்நாடு உண்மையில் உருப்பட வேண்டுமாக இருந்தால் இந்நாடு மதச் சார்பற்ற நாடாக மாற வேண்டும். எந்த மதத்திற்கும் சார்பு இல்லாத எல்லா மதத்தையும் சமமாக மதிக்கின்ற நாடாக மாற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
வாகரை வம்மிவட்டவான் வித்தியாலய பரிசளிப்பு மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழாவில் நேற்று(05.11.2016) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மாணிக்கமடு என்ற பகுதியில் 150 தமிழ் குடும்பங்கள் மற்றும் சில முஸ்லிம் குடும்பங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எந்தவொரு பௌத்தர்களும் வாழாத இடத்தில் திடீரென்று பௌத்த பிக்குகளால் மாணிக்கமடு என்ற சுத்தமான தமிழ் கிராமத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கின்றது.
இதனை தமிழர்களும் முஸ்லிம்களும் கூட்டாக எதிர்க்கின்றார்கள். ஏனெனில் வழிபடுவதற்கு பௌத்தர்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை வைப்பது என்பது ஒரு கடவுளாக மதிக்கப்படுகின்ற இறைவடிவத்திற்குரிய புத்தரை நிலங்களை ஆக்கிரமிக்கின்ற சிலர் அங்கு கொண்டு வைப்பது உண்மையில் கௌதம புத்தரின் போதனையை அறியாதவர்கள்.
கிளிநொச்சியில் பௌத்தர்கள் இல்லாத இடத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. அது நல்ல காரியம். அதே போன்று வழிபடுவதற்கு பௌத்த மக்கள் இல்லாத இடத்தில் சிலையை நிறுவதற்கு அரசியல் செயற்பாடுகள் அல்லது அடிப்படைவாத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டிய விடயமாக அமைந்திருக்கின்றது.
அதே போன்று, சமத்துவ மத உரிமை, சமத்துவ மொழி உரிமை, சமத்துவ பண்பாட்டு உரிமை கொண்ட நாடாக மாறுகின்ற போதுதான் இந்நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும். மாறாக ஒரு மதத்தையோ மொழியையோ நாங்கள் முதன்மைப்படுத்துகின்ற போது இந்நாட்டில் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது.
1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள அரச கரும மொழி சட்டம் கொண்டு வரப்பட்ட போது அப்போது எதிர்க் கட்சியில் இருந்த டாக்டர். சில்வா ஒரு மொழி என்றால் இரு நாடு என்றும் இரு மொழி என்றால் ஒரு நாடு என்றும் குறிப்பிட்டார். மொழிகளுக்கு, மதங்களுக்கு சமத்துவம் கொடுக்கின்ற போது ஒரே நாட்டில் மக்கள் சந்தோசமாக வாழ முடியும் என்றார்.

Post a Comment