0
சுவீஸ் உதயத்தின்அனுசரணையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட திகிலவெட்டை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் சாதனைபடைத்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 01.11.2016 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிபர் அ.தவனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டுவதற்கான உதவிகளை சுவீஸ் உதயத்திடம் வழங்குமாறு பாடசாலை நிருவாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இவ் உதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் தி.ரவி சுவீஸ் உதயத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் கோட்டக்கல்விப்பணிப்பாளர் நா.குணலிங்கம் உதவிக்கல்விப்பணிப்பாளர் கா.சுபாஷ்சந்திரன் பாடசலை அபிவிருத்திச்சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

2016 மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று தேசிய மட்டப் போட்டிக்குச் செல்லும் குறுந்திரைப்படம்: 'மாற்றம்'நிலைத்திரு சக்திவள அதிகார சபையினால் பாடசாலை சக்திவள கழங்களுக்கிடையே நடாத்தப்படும் இப்போட்டி பற்றிய சுற்றறிக்கை 2015ன் நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. 

நாட்டில் நடத்தப்படும் முதலாவது போட்டியிலேயே இப்பாடசாலை தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சக்திவளங்களை பயன்படுத்துதல் மற்றும் உருவாக்குதல் பற்றிய சிந்தனையை இத்திரைப்படம் ஊட்டுகிறது.
பொறுப்பாசிரியர்கள்: திரு.ஆ.பாலமுரளிதரன்இ திரு.நா.வினோதன்வெற்றிபெற்ற மாணவர்கள்: செல்வன்.க.கேமசாந் செல்வன். கி.ருஜிதன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்,

2015 மாகாண மட்ட சம்பியன்கள் (மெய்வல்லுநர் போட்டிகள்)
செல்வி. க.டென்சி டெபோராஇ செல்வி. ந. ரிச்சாயினிஇசெல்வி. ம.டிசாந்தினிஇ செல்வி.வ. லதுசா. ஆகிய மாணவர்களும் பொறுப்பாசிரியர்கள்:திரு.க.குணசீலன் திரு.க.குருசாந்தன் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.

இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட கோட்டக்கல்விப்பணிப்பாளர் நா.குணலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில் சுவீஸ் உதயம் அமைப்பானது காலத்தின்தேவையினை அறிந்;து ஏழைமாணவர்களுக்கும் மக்களுக்கும் உதவி வருகின்றமை பாராட்டுக்குரியது
கடந்த கால யுத்தத்தின்போது பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இக்கிராமத்து மக்களுக்கு வெளிநாட்டில் தாங்கள் உழைக்கும் பணத்தில் ஒருபகுதியினைச் சேகரித்து இவ்வாறான உதவிகளைச் செய்து வருவதையிட்டுப் பாராட்டுகின்றேன் இவ்வாறு உதவிகளை மேற்கொண்டுவருகின்ற சுவீஸ் உதயத்தின் தலைவர் ,செயலாளர்,பொருளாளர் மற்றும் ஏனைய அங்கத்தவர்கள் அனைவரையும் பாராட்டுவதுடன் அவர்கள் அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.





Post a Comment

 
Top