நீதிமன்ற தடை உத்தரவைமீறி ஏன் பொலிஸார் பிக்குவை காணிக்குள் நுழைய விட்டார்கள்? அரசாங்க அதிபரின் வருகையை ஏன் பிக்கு கோருகின்றார்? என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று (16) பங்குடாவெளியில் இடம்பெற்ற புத்தர் சிலை அமைத்தல் தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக வைத்து யோகேஸ்வரனினால் இன்று (17) வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கடந்த 11.11.2016 திகதி அன்று மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தின தேரோ பட்டிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் கிராம அதிகாரி, உத்தியோகத்தர்களை மிகவும் மோசமாக பேசியமையினாலும் அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாலும் இதற்கான நடவடிக்கையை முன்வைத்து பட்டிப்பளை பிரதேச செயலகத்தைப் பூட்டி பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 15.11.2016 திகதி அன்று வருகைதந்த மேலதிக அரசாங்க அதிபரும் பட்டிப்பளை பகுதிக்கான பொலிஸ் அத்தியட்சகரும் 16.11.2016 பிக்கு தொடர்பான விசாரணையை மேற்கொண்டு பிக்குவுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதாக் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு கிழக்கு பகுதியில் புத்தர்சிலை தாபிப்பு மற்றும் திட்டமிட்ட சிங்கள குடியேற்ற செயற்பாடுகளில் ஏதோ பின்னணி உண்டு பொலிஸார் ஏன் இந்த செயற்பாடுகளை கண்டும் காணாதவர்கள் போல் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட தவறுகின்றார்கள்.
அது மட்டுமின்றி பட்டிப்பளையில் நடைபெற்ற பிக்குவிற்கு எதிரான ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு அரசாங்க அதிகாரிக்கு எதிராக நடைபெற்றதால் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதருமாறு நாங்கள் தொலைபேசி மூலம் அழைத்தபோதும் மாவட்ட அரசாங்க அதிபர் தான்வராது மேலதிக அரச அதிபரை அனுப்பியுள்ளார்.
அத்தோடு பிரதேச செயலாளர், கிராம அதிகாரியை அவதூறாக பேசிய மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தின தேரர் தனியார் காணியில் வருகைதந்து அமர்ந்து கொண்டு அரசாங்க அதிபர் வந்தால் மாத்திரம் காணியை விட்டு வெளியேறுவேன் என பிக்கு கூறியமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அரசாங்க அதிபரை அழைத்தபோது அரச அதிபர் வரமறுத்தமையும் பிக்குவிற்கு அரசாங்க அதிபர் ஆதரவா! என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஆகவே பொலிஸாரின் நடவடிக்கை சார்பாகவும், அரசாங்க அதிபரின் வருகை மறுப்பு, பிக்கு வருகையை வேண்டல் சார்பாகவும் தீவிர விசாரணை செய்யவேண்டியுள்ளது.
இதேவேளை நேற்று (16) பங்குடாவெளியில் பிரச்சினை, மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தின தேரர் அவதூறாக பேசியது ,புத்தர் சிலை வைக்க நடவடிக்கை எடுத்தமையை தொடர்பாக தான் பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட உரையாற்றும்போது குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பட்டிப்பளை பிரதேச செயலாளர், கிராம அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு சபையில் எடுத்து கூறி உடனடியான மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தின தேரருக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் நீதி அமைச்சுடன் புத்தசாசன அமைச்சு இணைந்திருக்கக்கூடாது நீதி அமைச்சு தனியாக அமைந்திருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தின விகாராதிபதியின் செயற்பாடு மற்றும் புத்தர் சிலை விபகாரம் தொடர்பான செய்தி ஜனாதிபதி, பிரதமர் அவர்களுக்கும் உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிந்துள்ளது.
பிக்குவுக்கு நடவடிக்கை எடுக்க பொலிஸாரும் அரசாங்கமும் தவறுமாகையால், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களினாலும் மாவட்டம் முழுவதும் தொடர் ஹர்த்தால் மேற்கொள்ளப்படுவதை யாராலும் தடுக்கமுடியாது.
மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் இதற்கான பூரண ஆதரவை நாங்கள் வழங்கவும் தயாராகவுள்ளோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment