0
இதுவரை அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத, இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டமானது ஆட்பதிவு திணைக்களத்தால் எதிர்வரும் சனிக்கிழமை(19.11.2016) மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வேலைத்திட்டமானது காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார கூறியள்ளார்.

மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

இந்த ஒரு நாள் சேவைத்திட்டத்திற்கு கட்டணமாக 1000 ரூபா அறவிடப்பட உள்ளதோடு, விண்ணப்பதாரி பெற்றோர் அல்லது உறவினர் ஒருவரோடு அடையாள அட்டைக்கான உரிய அவணங்களுடன் தந்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பதாரிகள் கட்டாயமாக பாடசாலை சார்பில் முன்னிலையாகவேண்டும் என்ற அவசியமில்லை.

இதேவேளை விண்ணப்பித்துள்ள போதும் இதுவரை அடையாள அட்டை கிடைக்கப்பெறாத மாணவரகள் மற்றும் சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காத மாணவர்கள் ஆகியோரும் இவ்வேலைத்திட்டத்தின் மூலம் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

மேலும், குறித்த வேலைத்திட்டம் தொடர்பான மேலதிக தவல்களை 011 2862217 மற்றும் 011 2862228 எனும் இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

 
Top