0
இந்தியாவின் , தமிழகம் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே வானில் இருந்து எரிந்த நிலையில் மர்ம பொருள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

அது விமானத்தில் இருந்து விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த தாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நபரொருவரின் தோட்டத்திலேயே மர்ம பொருள் விழுந்ததுள்ளதுடன் இதனால் பகுதியில் பலத்த சத்தம் கேட்டுள்ளது.
கறுப்பு நிறத்தில் வித்தியாசமாக காணப்பட்ட அப்பொருட்கள் அப்பகுதியினரிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
பின்னர் இதுபற்றி பொலிஸ் நிலையத்திற்கு சிவகாமி அறிவிக்கப்பட்டுள்ளது அதையடுத்து பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பொருளை கைப்பற்றி பார்வையிட்டனர்.
பின்னர் இதுகுறித்து மதுரையில் உள்ள தடய அறிவியல் துறைககு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மதுரை தடய அறிவியல் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த மர்ம பொருள் விமானத்தில் இருந்து விழுந்து இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

 
Top