0
வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதிகளின் மூலம் பொருட்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றுள்ளது.

பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிக்குமார், கணக்காளர் திருமதி.டிலானி ரேவதன், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆலய நிர்வாக சபையினர், பொது அமைப்பினர் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது, பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனினால் 21 திட்டங்களுக்கு 3.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆறு திட்டங்களுக்கான பொருட்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஆலய புனரமைப்பு மற்றும் பொருட்களுக்கு பதின்மூன்று இலட்சம், பாடசாலை புனரமைப்பு மற்றும் பொருட்களுக்கு பத்து இலட்சம், கல்குடா வலயக் கல்வி அலுவலக பொருட்கொள்வனவுக்கு ஒரு இலட்சம், பொது வேலைகளுக்கு ஏழு இலட்சம் அடங்களாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top