வாழைச்சேனை விபுலானந்தர் வீதியில் அமைந்துள்ள இரண்டு மதுபானசாலைகள் தொடர்பாக அறிக்கையை பெற்று அதன் மூலம் பாதகமான பதில் கிடைக்கும் பட்சத்தில் இடமாற்ற நடவடிக்கை எடுக்குமாறு மதுவரித் திணைக்களத்திற்கு வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை மாலை ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது பாசிக்குடா மீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சனை தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரச்சனை தொடர்பாக விரைவில் மீனவர்கள் மற்றும் சுற்றுலாத் துறையினர் மற்றும் சுற்றுலா விடுதியினர் ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்தோடு நாசிவந்தீவு கிராமத்திற்கு போக்குவரத்து இடம்பெறுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டதுடன், வாழைச்சேனை பிரதேசங்களில் புனரமைப்பு இன்றி காணப்படும் வீதிகள் விரைவில் புனரமைப்பு செய்யப்படும்.தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீட்டுத் திட்டமானது கல்குடா, பாசிக்குடா, கல்மடு, பட்டியடிச்சேனை கிராமத்தில் வீடு இன்றி வாழும் நடுத்தர மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிற்றூழியர், வைத்திய தாதியர், வைத்தியர்கள் குறைவாக காணப்படுவதாகவும், இதனை நிவர்த்தி செய்து வழங்கினால் ஐந்து வருடத்தில் வைத்தியசாலையை தரமுயர்த்த முடியுமென வைத்திய அத்தியட்சகர் கோரியிருந்தார். இவ்விடயமாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
பாசிக்குடாவில் இயங்கும் சுற்றுலா விடுதிகளில் இரண்டாயிரத்து மேல் வேலை வாய்ப்பு காணப்படுவதாகவும், இப்பிரதேச யுவதிகளை இணைக்குமாறும், இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் அதிக நேரம் கடையாற்றுவதால் அவர்களுக்கான மேலதிக வேதனம் வழங்க பரிந்துரை வழங்குமாறு சுற்றுலா அதிகாரசபையின் பாசிக்குடா சுற்றுலா அதிகாரியிடம் பணிப்புரை விடுக்கப்பட்டது.
கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தண்ணீர் குறைபாடு நிலவுவதாக பாடசாலை அதிபரால் கோரப்பட்டமைக்கு அமைய வாழைச்சேனை பிரதேச சபையிடம் இருந்து தண்ணீர் கொள்கலன் மற்றும் நீரை பெற்றுக் கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.வாழைச்சேனை பிரதேசத்தில் யானைத் தொல்லைகள் மற்றும் திருடர்கள் பிரச்சினை காணப்படுகின்றமையால் உடனடியாக வாழைச்சேனை பிரதேச சபை வீதிகளில் மின்குமிழ்களை போடுமாறு அனுமதி வழங்கப்பட்டது.
வாழைச்சேனை பிரதேசத்தில் எந்தவித பதிவுகளோ அல்லது சான்றிதழ்களோ இன்றி இயங்கும் தண்ணீர் விற்பனை நிலையத்தை விசாரணை செய்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, வாழைச்சேனை பிரதேச செயலாளர் வ.வாசுதேவன், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment