புகைத்தல் பொருட்களுக்கான விலையினை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்ததன் பின்னர், சந்தைகளில் தற்போது புகைத்தல் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
புகைப்பொருட்களுக்காக 15 சதவீதம் வெற் வரி அறவிடவும், அதன் உற்பத்திகளுக்கு, உற்பத்தி வரியினை 5 சத வீதமாக அதிகரிக்கவும் அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
எவ்வாறாயினும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில வர்த்தக நிலையங்களில் புகைப்பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், புகைத்தல் பொருட்களை பதுக்குபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment