நாட்டில் பல பாகங்களில் கடும் வறட்சி காரணமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, குருநாகல்,வவுனியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் காணப்படுவதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வறட்சி காலநிலையால் அதிக பாதிப்புக்களை பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் எதிர்கொண்டுள்ளது.
பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் குளங்களில் நீர்மட்டம் விரைவாக குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வறட்சி காலநிலையினால் புத்தளம் மாவட்டத்தில் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 50 வீதம் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment