0
நீண்ட வறட்சிக்குப் பின்னர் கிழக்கில் பல பகுதிகளில் இடிமின்னலுடனான மழை நேற்று இரவு பரவலாகப் பெய்துள்ளது.
மட்டக்களப்பு நகரில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக இன்று அதிகாலை 5.30 மணிவரை 4.8 மில்லி மீற்றர் மழை கிடைக்கப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.
கடும் வறட்சியாக அதிக வெப்ப நிலையுடன் காணப்பட்ட கிழக்கு மாகாணத்தில் இப்போது, குளிரான காலநிலை நிலவுகிறது.
இதேவேளை, தற்போதைய மழை வீழ்ச்சி நாடு பூராகவும் எதிர்பார்க்கப்படுவதுடன், இடிமின்னல் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 2 மாத காலமாக நிலவிய அதிக வெப்பம் காரணமாக குடி தண்ணீர் தட்டுப்பாடு, மரக்கறி உற்பத்திகள் வீழ்ச்சி, பால் கறக்க முடியாத நிலைமை, நோய்கள் என்பன போன்ற பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top