விகிதாரசார அடிப்படையில் முப்படைகளிலும் தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்ள முடியுமா என பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 216 தமிழ் பேசும் காவல்துறை அலுவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களின் 157 பேர் வடக்கு கிழக்கிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு ஆரம்ப முயற்சியே ஆகும். இதன் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கின்றது என்று பார்ப்போம்.
எதிர்வரும் காலங்களில் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு காவல்துறை சார்ந்த பல வெற்றிடங்களுக்கு தமிழ் இளைஞர் யுவதிகள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
அத்துடன், நாடளாவிய ரீதியாக உள்ள காவல்நிலையங்களுக்கு இரண்டு தமிழ் பேசும் காவல்துறை அலுவலர்கள் வீதம் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Post a Comment