0
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலிருந்து விழுந்த நடத்துனரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு நாவற்கேணியைச்சேர்ந்த 46 வயதுடைய இராமலிங்கம் இராம்நாத் எனத்தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி கடந்த 14 ஆம் திகதி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் கடமையிலீடுபட்டிருந்த நடத்துனரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார் .

மிரோடக் கட்டு என்னும் இடத்தில் பஸ்வண்டி பயணித்துக்கொண்டிருந்தபோது, பஸ் வண்டியின் மிதிபலகையில் இருந்து விழுந்தே நடத்துனர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

 
Top