0

bhagavad gita tamil book க்கான பட முடிவுகீதை காட்டும் பாதை 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பனான அர்ஜீணனுக்கு பகவத் கீதையின் விஞ்ஞானத்தை வழங்கினார்.

காரணம் அர்ஜீணன் போர்க்களத்தின் மத்தியில் நின்றுகொண்டு தனது சத்திரிய தர்மமான போர்புரிதலை மறுத்தான். 
என்முன் போர்புரியத்திரண்டுள்ள இந்தக் கடல் போன்ற கௌரவசேனை எனது உறவினர்களே! இவர்களைக் கொல்வதா? இவர்களால் நான்
கொல்லப்படுவதா? என்றகுழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். 
கிருஷ்ணர் அவனது தேகாபிமானம் அஞ்ஞானத்திலிருந்து  அவனை விடுவித்து ஆத்மஞான உபதேசம் செய்தார். இந்த யுத்தமானது தர்மயுத்தம்
என்று அழைக்கப்படுகின்றது. அதுபோலவே நாம் அனைவரும் நமது வாழ்க்கை என்ற போர்க்களத்தில எது செய்ய வேண்டும் எது செய்யக் கூடாது எது சரி எது தவறு தர்மம் என்பது யாது? அதர்மம்  என்பது யாது?என்றவிடயங்களில் நாம் தெளிவில்லாது குழம்பியுள்ளோம். நாம் ஒவ்வொருவரும் பகவத்கீதையின் ஞானத்தைப் பெறவேண்டிய சிறிய அர்ஜீணர்களே!

 

ஆத்மாநிரந்தரமானது   (ஆத்மாஅழிவற்றது )


ஆன்மீக வாழ்க்கையின் முதற்பாடத்தை கீதாச்சாரியரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையின் தொடக்கத்தில் தனதுபக்தனான அர்ஜீணனுக்கு விளக்குகிறார் நாம் அழியக்கூடிய  இந்த ஜடவுடல் அல்ல அதற்கு அப்பாற்பட்ட ஆன்மீகமான உயிர்வாழி.
ஆத்மா சிறுவயதிலிருந்து இளமைக்கும் இளமையிலிருந்து முதுமைக்கும்
கடந்துசெல்வதைப் போல ஆத்மா மரணத்தின் போது வேறு உடலுக்கு மாற்றம் பெறுகின்றது. நிதானபுத்தியுடையவர் இது போன்ற மாற்றத்தால் திகைப்படைவதில்லை. 
உயிர் இயற்கையின் சட்டத்தின்படி கர்ம வினைகளுக்கேற்ப வேறு உடலை அடைகிறது.( 2.13)
பழைய ஆடைகளைப் புறக்கணித்து புதிய ஆடைகளை ஒருவன்
அணிவதைப் போன்றே பழைய உபயோகமற்ற உடல்களை நீக்கி ஆத்மா புதிய உடல்களை ஏற்கின்றது. (2.22)
ஆத்மாவின் இயற்கையான தன்மை அழிவற்றது. பூர்ணமான ஞானமுடையது. ஆனந்தமயமானது இந்த ஜடவுலகில் ஆத்மாசெய்ய வேண்டியது எதுவுமில்லை ஆத்மா ஆன்மீகவுலகிற்குச்  சொந்தமானவன் ஆவான்.


  

பகவத் கீதை வயதானவர்களுக்கு மட்டுமா?    

சர்வவேதாந்தசாரம் பறைசாற்றுவதைப்போல (அதாத்தோ பிரம்ம ஜிக்ஞாசா) மனிதவாழ்க்கை பரமசத்தியத்தைப் பற்றி விசாரிப்பதற்காக மட்டுமே ஆத்மா இந்த ஜடவுலகத்தின் மிகவுயர்ந்த பிரம்மலோகத்திலிருந்து தாழ்ந்த நரகலோகம் வரை உள்ள    கிரகங்களில் 84 இலட்சம் உடல்களில் பயணித்தபோதிலும் திருப்தியடைவதில்லை. இறைவனை அறிவதற்கான தகுதி மிருக உடல்களில் கிடைப்பதில்லை. மானிதவுடல் கடவுளை அடைவதற்கு சாதகமானது.
கடவுளை அடைவதற்கான  இந்த அதற்புதமான மனிதவுடலைக் கொண்டு கேவலம் மிருகத்தைப்போல  உண்பது  உறங்குவது குழந்தைகள் பெறுதல் தற்காத்தல் போன்ற செயல்களில் மட்டும்
ஈடுபடுவது கண்டிக்கத்தக்கதாகும். வேதங்கள் மிருகத்தைப்போல அடிப்படைத்தேவைகளுக்காகவாழும்  மனிதர்களை (த்வி பாத பசு)
இரண்டுகால் மிருகம் என்று எச்சரிக்கின்றது.
 நாம் கீதை ஞானத்தைக் கொண்டு பிறப்பு, இறப்பு, முதுமை, நோய்
போன்ற கொடூரமான பிரச்சினையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்காக உபதேசிக்கப்பட்டது.

பக்தப்பிரகலாதன் இந்தபாகவததர்மத்தை ஜந்துவயதிலிருந்து கடைப்பிடிக்குமாறு கூறுகின்றார் .பகவத்கீதையின்
ஞானமானது கடவுளின் லோகத்தைஅடைவதற்கு முயற்சிசெய்யும்
அதிமேதாவிகளுக்கான அவசரத்தேவையாகும் பகவத்கீதையின் இரகசியமான ஞானமானது   முட்டாள்களுக்கானது  அல்ல

             
எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு


அறிவின் அரசனாகத் திகளும் பகவத்கீதையிலிருந்து உயர்ந்த ஆச்சாரியர்கள் விளக்குவது உண்மையான பிரச்சினைகளுக்கான தீர்வு.கீதையில் புதைந்துள்ளது  அந்தப் பிரச்சினை நான்கு வகையாகப்பிரிக்கப்படுகின்றது . மூன்று  நிபந்தகைகளுக்கு  உட்பட்டது. அவை எந்தவொரு ஜீவராசியாலும் விரும்பத்தகாதது. எந்த உயிர் வாழியாலும் தடுக்க முடியாதது உடல் பெற்ற அனைவரும் சந்தித்தே ஆகவேண்டும. இதுவே இவ்வுலகின் உன்மையான பிரச்சினை என்று அறிவுடையோர்களால் ஆதரிக்கப்ட்டுள்ளது.
இப்பிரச்சினைக்குத் தீர்வுகொடுப்பது உண்மையானசமயம்.நேர்மையான மதம் ஆத்மாவின் சநாதனதர்மமாகும். இந்த நான்கு பிரச்சினைகள் இல்லாத இடம் வைகுண்டம் என்று அழைக்கப்படுகின்றது.அங்கு நாம் ஏற்றம் பெறுவதற்காகவே கிருஷ்ணர் கீதையை உபதேசம் செய்தார்.
ஏல்லாவிதமான தர்மங்களையும் துறந்து என்னிடம் மட்டுமே சரணடைவாயாக! உன்னை எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும்
நான் விடுவிக்கின்றேன் பயப்படாதே.(18.66)

     
கீதை படிப்பதன் விளைவு


எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பது எவனொருவன் அறிகின்றானோ அவன் இந்த உடலை விட்டபின்
மீண்டும் இந்தப் பௌதீக உலகில் பிறவியெடுப்பதில்லை. அர்ஜுனா அவன்
எனது நித்தியவுலகை அடைகின்றான். அழியா அமுதான கீதையை கேட்ட அர்ஜீணன் தனது குழப்பத்திலிந்து விடுபட்டு முக்கியடைந்தான். நாமும் கீதையின் ஞானத்தைப் பெறஅர்ஜீணன் அடிச்சுவட்டைப் பின்பற்றுவோம்.
பவித்திரமான கீதையின் ஞானமுள்ளோர் பிறப்பு, இறப்பு,முதுமை, நோய்
என்ற சம்சாரசாகரத்தை எளிமையாகக் கடந்துவிடலாம்.

யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கின்றாரோ உன்னத வில்லாளியான அர்ஜீணன்
எங்கெல்லாம் இருக்கின்றாரோஅங்கெல்லாம் நிச்சயமாக செல்வமும் வெற்றியும் அசாதாரணமான வலிமையும் 
நியாமமும் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.(18.78)




Post a Comment

 
Top