0
கடந்த மாதம் 25ம்  திகதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி விழாவானது உலகம் முழுவதும் மிகவிமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது. இதனையொட்டி  கண்டி திகன அம்பாகோட்டை அகில உலக   கிருஷ்ண பக்தர்களால் மிக விமர்சையாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்ட  ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

04.09.2016 அன்று அம்பாக்கோட்டை பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரும் ராதா ராணியும் ரதத்தில் பவனி வர பக்தர்கள் ரதம் முன்பு வடம்பிடித்து இழுத்து செல்ல ஹரே கிருஷ்ண ஹரே  கிருஷ்ண என்று பக்தர்கள் பஜனை கீதங்கள் பாட மிருதங்கம்  ஒலிக்க கலாசார பாரம்பரியமான  கோலாட்டம், மயிலாட்டம் , காவடியாட்டம் என்பன இடம்பெற்று ரதபவனியானது அம்பாகோட்டை மைதானத்தை அடைந்ததும் ரதபவனியானது நிறைவெய்தியது.

அதனைத்தொடர்ந்து அரங்கில் பஜனை, அபிசேகம் , ஆராத்தி, பூஜை பகவத் கீதை சொற்பொழிவு இடம்பெற்று மற்றும் பல கலாசார கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியில் கிருஷ்ண பிரசாதம் வழங்கப்பட்டது.

இன் நிகழ்வில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் உட்பட அவ்வூர்  அரசியல் பிரமுகர்கள் ஆலய பூசகர்கள்  தர்மகர்த்தாக்கள் மற்றும் இவ்வூர் பொதுமக்கள் என்று பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .
























Post a Comment

 
Top