சுவிஸ்லாந்து வாசல் செந்தமிழ்ச் சோலைஅமைப்பின் நிதியுதவியுடன் நடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களின் நடவடிக்கையினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களின் இல்லத்தில் (12.9.2016) திங்கட்கிழமை நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் கடந்த முப்பது வருடங்களாக இடம் பெற்ற யுத்தத்தினால் தமிழர்களின் கல்வி பின்னடைவை சந்தித்துள்ளது.
பொருளாதார ரீதியாக தமிழர்கள் பாதிக்கப்பட்டதால் மாணவர்களுக்கு கல்வியை வழங்க முடியாமல் பெற்றார்கள் சிரமப்படுகின்றனர்.
வடக்கு கிழக்கில் தமிழர்களின் கல்வியை மேம்படுத்த அனைவரும் முன் வரவேண்டும். தமிழ் மாணவர்களின் கல்வி அக்கறை எடுத்து செயற்படுவதுடன் அவர்களுக்குதவ வரவேண்டும்.
அந்த அடிப்படையில் நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவிஸ்லாந்து சென்ற போது சுவிஸ்லாந்து வாசல் செந்தமிழ்ச் சோலைஅமைப்பிடம் வேண்டுகோள் விட்டேன்
கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மாணவர்களுக்கு உதவுமாறு கோரினேன்.
இந்த சுவிஸ்லாந்து வாசல் செந்தமிழ்ச் சோலை அமைப்பு வடக்குக்கு உதவி செய்து வருகின்றனர்.
முதல் தடவையாக எனது கோரிக்கையை ஏற்று தற்போது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மாணவர்களுக்குதவ முன் வந்துள்ளனர். அவர்கள் தொடர்ச்சியாக உதவ வேண்டும் அதற்காக நான் நன்றி கூறுகின்றேன் என்றார்.
இதன் போது பல்கலைக்கழக 12 மாணவர்களுக்கு தலா ஒரு மாணவருக்கு 4500 ரூப வீதம் 12 மாhதங்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான
பி.அரியநேந்திரன், மற்றும் பொன் செல்வராசா மற்றும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான எஸ்.குலநாயகம் மற்றும் கே. கனகசபாவதி உட்பட முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
Post a Comment