காலை 5.00 மணியளவில் கன்னியா என்னும் இடத்தில் வளைவு ஒன்றில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தின் போது 7 பயணிகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர் இவர்கள் உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். சில பயணிகள் சிறிய காயங்களுக்கும் உள்ளாகினர்.
விபத்துக்கான காரணம் உடனடியாக அறியப்படவில்லை உப்புவெளி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சாரதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பாதையை விட்டு விலகி குடைசாய்ந்த நிலையில் வண்டி நிற்பதை படத்தில் காணலாம்.
Post a Comment