0
உலக மயமாக்கல் சூழலில் ஈழத்துக் கலை இலக்கியகலாசார போக்கும்,சவாலும் எனும் தொனிப்பொருளில் முத்தமிழ் விழா தமிழ்மக்கள் பேரவையின் கலை கலாசார உப குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும்15 ,16,17 ஆம் திக திகளில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

 இதில் முதல் நாள் 15 ஆம் திகதி  வியாழக்கிழமை  மாலை 4 மணிவரை நடைபெறும் நிகழ்வாக வரவேற்பு நடனம் கிராமிய நடனம் மிருதங்க இசை, வில்லுப்பாட்டு வயலின் இசை பரதநாட்டியம் பட்டிமன்றம் இசைவிருந்து நிகழ்வுகள் மட்டக்களப்பு பாட்டாளிவிளையாட்டு அரங்கமும் அதனைச் சூழவுள்ள மட்டுவாவிக்கரை கோட்டமுனை பகுதியிலும் நடைபெறவுள்ளதுடன்.
இந்நிகழ்வில்  பிரதம விருந்தினராக  வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் கலந்த சிறப்பிக்கவுள்ளார்.


இரண்டாம் நாள் நிகழ்வு 16 ஆம்திகதி வெள்ளிக்கிழமை காலையில் ஆரம்பித்து மாலை 5 மணி வரை இடம்பெறும் இதில் பிரதம விருந்தினராக பேராசிரியர் சி.மௌனகுரு சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபர் ரி.அருணகிரிநாதன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மூன்றாம் நாள் 17 ஆம்திகதி காலை முதல் மாலை 5 மணிவரையும் கலை காலாசார நிகழ்வுகள் இடம்பெற இருப்பதுடன் இதில்  பிரதம விருந்தினராக கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமதுசிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

Post a Comment

 
Top