0
வூட்டன்  முத்துமாரியம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டமானது 25.08.2016 காலை 06.00 மணிக்கு ஆரம்பமாகி பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு விசேட பூஜை, விசேட அபிசேகம், குழந்தைக்கிருஷ்ணருக்கு பொன்னூஞ்சல் ஆட்மடுதல், மற்றும் பலதரப்பட்ட இனிப்பு பதார்த்த பிரசாதங்களும் நெய்வேத்தியம் செய்யப்பட்டு  நிகழ்வுகள் இடம்பெற்றன. 

இதன் போது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினரின் பஜனை மற்றும் பகவத்கீதை சொற்பொழிவு இடம்பெற்று.
இறுதியில் கிருஷ்ண பிரசாதம் வழங்கப்பட்டு நிகழ்வானது நிறைவெய்தியது.

இன் நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர் ஒருவர் கருத்து தெரிக்கையில் இது வரைக்கும் இப்பேர் பட்ட சொற்பொழிவுகளில் கலந்துகொண்டதில்லை ஆனால் இச் சொற்பொழிவு எனக்கு மட்டுமல்லாது பலதரப்பட்ட மக்களின்  பலதரப்பட்ட குழப்பங்களையிம் விலக்கி அவர்களையும்  கிருஷ்ண பக்தி நிலைக்கு கொண்டு சென்றுருக்கும் எனத்தெரிவித்தார்.

இதில் அவ் ஊர் வாழ் கிருஷ்ண பக்தர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அருள் கடாட்சம் வேண்டி நின்றமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

 
Top