0


ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடியமாவாசை மகோற்சவம் இன்று மிகவும் கோலாகலமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை விசேட யாக பூசை இடம்பெற்றதுடன் மூல மூர்த்திக்கு கும்பஅபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகோற்சவ கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தினை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தம்பத்துக்கு அருகில் விசேட பூசை இடம்பெற்று.வேத,நாத,மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசகளுடன் பக்தர்கள் புடைசூழ கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து தம்பத்துக்கு அபிஷேகமும் செய்யப்பட்டு விசேட பூசையும் இடம்பெற்று. பிரதம குருவினால் அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.


இதனை தொடர்ந்து விநாயகப்பெருமான் உள் வீதியுலா வந்து வசந்த மண்டபத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றன. பல இடங்களிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானின் அருள்பெற்று சென்றமை குறிப்பிடத்தக்கது.













Post a Comment

 
Top