விண்ணப்பதாரர்கள் உயர்தர பரீட்சை நுழைவுச் சீட்டுக்களில் ஏதாவது திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் இம்மாதம் 15-ம் திகதிக்கு முதல் அதனை மேற்கொள்ள வேண்டும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதியில் இருந்து 27-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் இரண்டு இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேரும் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் 74 ஆயிரத்து 614 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விபரங்களுக்கு 0112 78 42 08 மற்றும் 0112 78 45 37 இலக்கங்களுக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை நுழைவுச் சீட்டுக்கள் தற்போதைய நிலையில் அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment