பாசிக்குடா மீனவர்கள் வெளியேற்றப்படுவார்களாயின் த.தே.கூட்டமைப்பு பாரிய நடவடிக்கை எடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்குடா பகுதிக்கு சொந்தமான பாசிக்குடா கடற்கரை காணியை அபரிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரிடம் நேற்று வினவிய போது அவர் மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மீனவர்கள் அதிகமாக வாழும் பிரதேசமான பாசிக்குடா கடற்கரை காணியை அரசாங்கம் அபகரிக்க போவதாக மீனவர்கள் தன்னிடம் கூறியதனால்,இந்த விடயம் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment