0
2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு அந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததான மகிந்த அரசு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுபாண்மை மக்களுக்கு கொடுக்க வேண்டிய நீதியை, உரிமையை கொடுக்கத் தவறியது. இந்த மக்களின் பெரும்பான்மை வாக்குகளை மட்டும் வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக இந்தக் கதிரையில் இருக்கலாம் என்று கனவு கண்டார் ஆனால் என்ன நடந்தது 2015 ம் ஆண்டு ஜனவரி 8 ம் திகதி எமது சிறுபான்மை மக்களின் வாக்குப்பலமும் நாட்டின் பெரும்பான்மை மக்களின் அரைவாசி வாக்குப் பலத்தையும் வைத்துக்கொண்டு  மகிந்த அரசை கவிழ்த்தி புதிய நல்லாட்சி என்ற அரசை இங்கு கொண்டு வந்தார்கள்.

ஆனால் புதிதாக வந்ததான அரசும் அதே பாணியில் எத்தனையோ வேலைகளைச் செய்யத் தவறியது. நாட்டில் ஒரு புதிய அரசு வந்த குறுகிய காலத்தினுள் நாட்டில் உள்ள மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் ஆனால் இந்த அரசும் மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை செய்ய தவறி இருக்கின்றார்கள்.

இன்று 30.05.2016 ஏறாவூர் 4 எல்லை நகர் கிராம மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இவ்வாறு உரையாற்றினார். இந் நிகழ்வு எல்லை நகர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் இன்று 5.00 மணியளவில் இடம் பெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பா.உ கிராம மக்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் முன்வைத்துள்ள வேண்டுகோள்களை விரைவில் முடித்துத் தருவதற்கு முழு முயற்சி எடுப்பதாகவும் தெரிவித்தார்


Post a Comment

 
Top