0
செங்கலடி  மீகாவேல் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி பாடசாலையின் அதிபர் திருமதி.P.கேதீஸ்வரன் மற்றும் திரு.S.மைக்கல்  தலைமையில் 28.05.2016 சனிக்கிழமை 2.30 மணிக்கு செங்கலடி யுனைட்டட் விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்றது.
 அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசிய, பாடசாலை, கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய, பாடசாலை கீதம் என்பனவும் இசைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக திருமதி.வினோதரன் கயல்விழி(Field Officer Pre School) மற்றும் சிறப்பு அதிதிகளாக வணபிதா.திரு.S.ஜீவகாந்தன், திருமதி.J.K.டயானா எல்டன் மற்றும் பல அதிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மற்றும்  கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும்,  பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டது.









Post a Comment

 
Top