0
மட்டக்களப்பில் தங்களது மேய்ச்சல் தரை நிலங்களை மீட்டு தருமாறு கோரி பாரிய கண்டன பேரணி ஒன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது .

மண்முனை மேற்கு,ஏறாவூர்பற்று செங்கலடி ,கோறளை பற்று கிரான்,வாழைச்சேனை ,கோறளை பற்று வடக்கு வாகரை ,ஆகிய பிரதேச  செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட பகுதிகளில் மத்திய அரசுக்குரிய மகாவலி அபிவிருத்தி சபை ,வனவிலங்கு திணைக்களம் வன பரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமான அரச காணிகளின் எல்லைப் பகுதியில் கிட்டத்தட்ட 175 ஆயிரம் கால் நடைகள் நீண்ட காலமாக இப் பிரதேசத்தை மேச்சல் தரையாக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும் .

இந்த கால் நடைகளின் மேச்சல் தரை தொடர்பாக பலவருடங்களா பல பிரச்சசனைகளை கால் நடை பண்ணையாளர்களாகிய இவர்களால் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அதற்குரிய தீர்வுகள் எட்டப்படவில்லை.

இன்று மட்டக்களப்பு அரச பஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பித்த பேரணி மட்டக்களப்பு கச்சேரி வரைக்கும் இந்த பேரணி சென்று இருந்தது .

கச்சேரி வாசலில் கடமையில் இருந்த பொலிசாரால் தடுத்து நிறுத்தப் பட்டத்தை அடுத்து மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தலைமையில் 10 பேர் சென்று அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினனையும் கையளித்துள்ளனர் .

இந்த பேரணியின் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெட்னம், மா.நடராஜா ஆகியோரும் கலந்து கொண்டதுடன் மகஜர்களும் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.













Post a Comment

 
Top