0
(செய்தியாளர்-மூலையூரான்)
இந்துமா சமுத்திரத்தில் முத்தெனத் திகழ்கின்ற இயற்கை எழில்மிகு ஈழமணித்திருநாட்டின் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்டுமா நகரில் சிலம்பு தந்த கண்ணகியாள் சீற்றம் தணிந்து வந்தாறிய வந்தோரை வாழவைக்கும் வந்தாறுமூலை வரலாற்று சிறப்புமிகு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி பெருவிழா 19.05.2016 வியாழக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 23.05.2016 வைகாசித் திங்கள்  திருக்குளிர்த்தியுடன் இனிதே நிறைவடையவுள்ளது.

எனவே அனைத்து அடியார்களும் பக்தி சிரத்தையோடு ஆசாரசீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து கண்ணகி அம்பாளின் திருவருள் பெற்றேகுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.

Post a Comment

 
Top