மகிழடித்தீவு சிவநெறிக்கழகத்தின் ஸ்ரீ சித்திவிநாயகர், கண்ணகி அம்மன் பக்தி புகழ்மாலை இறுவெட்டு வெளியீட்டு விழா நேற்று இரவு(20) வெள்ளிக்கிழமை ஆலய அரங்கில் நடைபெற்றது.
ஆலயத்தினது வரலாற்றை ஆவணப்படுத்தும் உத்தியாக பக்தி புகழ்மாலை பாடல் தொகுப்பு வெளியிடப்படுவதாகவும், கடந்த காலங்களிலும் ஆலயத்தினது தோத்திரங்களை புத்தகமாக்கி வெளியீட்டதாகவும், இவ்வாறான ஆவணப்படுத்தல் முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபடவிருப்பதாகவும் கழகத்தின் தலைவர் ந.அன்னகேசரி தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
வெளிநாட்டில் தொழில்புரியும் சிவநெறிக்கழக அங்கத்தவர்களின் அனுசரணையில் இவ் இறுவெட்டு வெளியிடப்பட்டமையுமம் குறிப்பிடத்தக்கது.
Post a Comment