0
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வந்தாறுமுலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில்  19.05.2016 அன்று மதியம் 12.00  மணியளவில்  உணர்வு பூர்வமாக  இடம்பெற்றது.

இன் நிகழ்வானது வந்தாறுமூலை கண்ணன் பஜனைக் கலை மன்றத்தினரின் கூட்டுப்பிராத்தனையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து  முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் உயிர் இழந்த உறவுகளின் நினைவாக பூஜைகள்,நினைவுச்சுடர்,நினைவுரை மற்றும் இறுதியாக வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு சுமார் பி.ப.02.00 மணியளவில் நிறைவெய்தியது.

இன் நிகழ்வில் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாண சபை சபையின் பிரதி தவிசாளர் இந்திரக்குமார் பிரசன்னா, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான இரா.துரைரத்தினம்,கோ.கருணாகரன்,மா.நடராஜா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா பா.அரியனேந்திரன்,இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொகுதி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






















Post a Comment

 
Top