(செய்தியாளர்-மூலையூரான்)
இந்து நிலத்தின் நித்திலமாம் இலங்கைத்திருநாட்டின் கிழக்கில் திருப்பதியாக விளங்கும் மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய இராஜ கோபுர மேற்கு வாசல் கும்பாபிஷேகப் பெருவிழா நிகழும் துர்முகி வருடம் வைகாசி 24ம் நாள் 06.06.2016 திங்கட்கிழமை பூர்பபட்ஷ மிருகசீரிட நட்சத்திரமும்,அமிர்தசித்த யோகமும் கூடிய 11மணி 52 நிமிடம் தொடக்கம் 01மணி 22 நிமிடம் வரையுள்ள சுப வேளையில் இடம்பெறவுள்ளது.
கிரிகைகள் யாவும் திங்கட்கிழமை காலை 06.00மணிக்கு ஆரம்பமாகும்.
கிரிகைகள் யாவும் ஆலய பிரதம குரு விஷ்ணு பூஜா நவக்கிரக பூஜா துரந்தர் சோதிட இளம் சைவமணி சிவஸ்ரீ சாட்சிநாதன் தெய்வேந்திரக் குருக்கள் தலைமையில் நடைபெறும்.
எனவே அடியார்கள் அனைவரும் பக்திசிரத்தையோடு ஆசாரசீலர்களாக வருகைதந்து மூவடியால் உலகளந்த மூலவரின் அருள்பெற அனைவரையும் அன்புக் கரம் நீட்டி அழைக்கின்றனர்.
ஆலய நிர்வாக சபையினரும் வந்தாறுமூலை இந்து ஆலயங்களின் புனரமைப்பு குழுவும்


Post a Comment