ஸ்ரீ ரவிசங்கர் குருஜீ அவர்கள் கடந்த 17ம் திகதி பிரதமர் அவர்களை அலரி மாளிகையில் வைத்து உரையாடினார்.அப்போது இலங்கை இனப்பிரச்சினை பற்றிப் பேசப்பட்டது.
இதனை முன்னிட்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள அவரது பிரதான சீடர் சுவாமிஜீ சத்யோஜாதாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடிவுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் பின் பாராளுமன்ற உறுப்பினரினால் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு பற்றி அழுத்தம் கொடுக்க உதவுமாறும், மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் விதைவைகளக்கப்பட்டவர்களுக்கும் , பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்களுக்கும் பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜீயின் வாழுங்கலை நிறுவனத்தின் ஊடாக உதவிகளை பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டார் .
இதற்கு இணங்க பிரதான சீடர் சுவாமிஜீ சத்யோஜாதா இது தொடர்பாக பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜீயுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு இது தொடர்பாக நடவடி க்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது .
இந்நிகழ்வு 21.05.2016 அன்று சனிக்கிழமை நண்பகல் மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் உள்ள ஆச்சிரமத்தில் இடம்பெற்றது




Post a Comment