0
வந்தாறுமூலை இந்து இளைஞர் மேம்பாட்டு மன்றத்தின் மாதாந்த பொதுக்கூட்டம் மன்றத்தின் தலைவர் ஜெ.ஜக்சன் தலைமையில் பி.ப 06.30 மணியளவில் வந்தாறுமூலை மஹா விஷ்ணு ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் நிரல் வரிசையில் முதல் அங்கமாக இறை வணக்கம் இடம்பெற்று அடுத்து எமது சங்க உறுப்பினர் அமரர் திலகராஜ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியின் நினைவாக ஆத்மா சாந்தியடைய  இறைவனை  பிரார்த்தனை செய்து தொடர்ந்து தலைவரின் தலைமை உரை இடம்பெற்றது.

தொடர்ந்து செயலாளரினால் சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு,மன்ற செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று முடிவுகள் எட்டப்பட்டு 08.00 மணியளவில் செயலாளரின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

இக் கூட்டத்தில் அதிகளவான இளைஞர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






Post a Comment

 
Top