0

(செய்தியாளர்-மூலையூரான்)
வந்தாறுமூலை வரலாற்று சிறப்புமிகு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி பெருவிழாவின் 2ம் நாள் பகல் பூஜை அத்தியாகுடி பெரு மக்களினால் 20.05.2016 அன்று மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இப்பூஜையானது பி.ப 01.00 மணியளவில் ஆரம்பமாகி கண்ணகி அம்பாளுக்கு விஷேட பூஜைகள்,ஆராதனைகள்,1008 நாம தோத்திரங்கள்,மழைக்காவியம், உடுக்குச்சிந்து என்பன பாடப்பட்டு பூஜைகள் நிறைவுபெற்றது.

தொடர்ந்து அனைத்து அடியார்களுக்கும் ஆலய முன்றலில் நோருப்பு வழங்கப்பட்டு சுமார் 03.00 மணியுடன் நிகழ்வு நிறைவெய்தியது.

அத்தோடு இன்நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

 
Top