0





பிரதேச செயலக அனுசரனையுடனும் ஆறுமுகத்தான் குடியிருப்பு வங்கிச் சங்கமும் ஐயன்கேணி இளம்பிறை விளையாட்டுக்  கழகமும் இணைந்து இவ் ஆண்டிற்கான சித்திரை விளையாட்டு  விழாவை இன்று 25.04.2015 ஐயன்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்தியது.

இதன்போது, தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் சிறுவர்களுக்கான தற்கால புதிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகளாக, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.சதாசிவம் வியாழேந்திரன்,  சமூர்த்தி முகாமையாளர் திரு.எஸ்.ஜெயராஜ், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திரு.கே.கணேசமூர்த்தி,  ஐயன்கேணி பாடசாலை அதிபர் திரு.எம்.மனோகரன், சமூர்த்தி வங்கி முகாமையாளர் திரு.கே.திவாகரன்,   சமூர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.கே.வினோதினி, கிராம சேவை உத்தியோகத்தர் திரு.ஏ.பாலகிருஷ்ணன்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







Post a Comment

 
Top