0
இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2016 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டோருக்கும், சான்றிதழ் பெற தகுதி பெற்றோருக்குமாக 80 வீர, வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் , அவர்களுக்கான பயிற்சி பட்டறையும் இடம்பெற்றது.
கடந்த 16ம் திகதி சனிக்கிழமை மு.ப. 8.30 மணிக்கு கிளிநொச்சி மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட சதுரங்கச் சங்கத் தலைவர் தி.சிவரூபன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
மேற்படி போட்டியின் மாவட்ட மட்டத் தெரிவுப்போட்டிகள் முதல் முறையாக கிளிநொச்சியில் கடந்த 9ம், 10ம் திகதிகளில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து ஐம்பத்து மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் இருபத்தேழு பேர் சான்றிதழ் பெறத் தகுதி பெற்றிருந்தனர்.
இவர்களுக்கான சான்றிதழ் வழங்கலும் பயிற்சி வழங்கலும் நிகழ்வே நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் இந் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்களை கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் , கிளிநொச்சி வலய ஆசிரிய ஆலோசகர் எஸ்.குமரன், கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் செயலாளர் எஸ்.சுதாகரன் ,
பொருளாளர் பொறியியலாளர் ப.கஜன், உபசெயலாளர் பொறியியலாளர் வி.விஜிதரன், சுற்றுப்போட்டிகளுக்கான உப தலைவர் ச.கௌரீசன் , இதழாசிரியர் ப.கார்த்திகா, சதுரங்கப் போட்டிகளின் கிளிநொச்சி மாவட்ட நடுவர்களான தி.லோஜினி, க.மதுமிதா ஆகியோர் வழங்கி வைத்தனர்.

Post a Comment

 
Top