புவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ஆம் திகதி புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.
7.8 பில்லியன் மரங்களை எதிர்வரும் 5 வருடங்களுக்குள் நாட்டுவதும் புவியை சுத்தமாகவும் இயற்கை வனப்புடனும் பேணுவது இந்த புவி தினத்தின் கருதுகோளாகும்.
1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.
அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவரான ஜான் மெக்கானெல் (John McConnell) அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர்.
மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார்.
அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் புவி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
புவி தினம் அனுஷ்டிக்க ஆரம்பித்து இன்று 40 வருடங்கள் கடந்துள்ள போதிலும் புவியின் பாதுகாப்பு தொடர்பிலான கருதுகோள்கள் பெருமளவில் அதிகரித்துள்ளனவே தவிர, புவி வெப்பமடைதல் போன்ற இயற்கைக்கு ஒவ்வாத காரணிகளை மனிதன் அதிகளவில் செயற்படுத்தியே வருகின்றான் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

Post a Comment