கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புதிய தேர்தல் முறையின் கீழ் விரைவில் நடாத்தும் நோக்குடன் எல்லை நிர்ணயம் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதி இந்த கருத்தினை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெகுவிரைவில் நடாத்தப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா பல முறை உறுதியளித்திருந்தார்.
மேலும், 1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு தேர்தல் நடாத்தப்படுகின்றது எனவும், அதனால் இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த வேண்டிய நிலைப்பாட்டில் தான் உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment