0
(செய்தியாளர்.மூலையூரான்)
 கடந்த 19.12.2015 சனிக்கிழமை காலை 09.30 மணியளவில்  மட்டக்களப்பு வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகம் அறிவிப்புத் துறையில் ஈடுபட்டு வருபவர்களுக்கான அறிவிப்பாளர் பயிற்சி செயலமர்வு ஒன்றை நடாத்தியது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரூபவாஹினி தொலைக்காட்சியின் சிரேஷ்ட அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமாகிய ஏ. ஆர். எம் ஜிப்றி இச்செயலமர்வில் கலந்துகொண்டு இளம் அறிவிப்பாளர்களுக்கான பயிற்சிகளை வழங்கினார்.

தொடர்பாடல், வானொலி மற்றும் ஊடக நெறிமுறைகள், வானொலி செய்தி எழுதுதல் மற்றும் முன்னளித்தல், அறிவிப்பு படிமுறைகள், பண்பலை அறிவிப்பாளர்களின் கடமைகள் மற்றும் சேவைகள் ஆகிய விடயங்கள் இச்செயலமர்வில் அறிவுறுத்தப்பட்டன.

இன் நிகழ்வில் அறிவிப்புத் துறையில் ஆர்வம் மிக்க இளம் அறிவிப்பாளர்கள் கலந்து கொண்டமை குறிபிடத்தக்கது.










Post a Comment

 
Top