0
இலங்கையில்
இயற்கை வலு மின் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி, மீளுருவாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக சூரிய ஒளி மற்றும் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவை அடுத்த வருடம் முதல் தினமொன்றுக்கு 500 மெகாவொட் வரையில் அதிகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு காற்று மற்றும் சூரிய ஒளி கொண்டு தினமொன்றுக்கு 400 மெகாவொட் வரையிலான மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக சிறிய நீர்த்தேக்கங்கள் மற்றும் இயற்கை வலு மூலங்களைக் கொண்டு மின்னுற்பத்திய செய்யும் நடவடிக்கைகளை இலங்கை எங்கும் பரவலாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் புதிய மின்சாரக் கொள்கையின் பிரகாரம் எதிர்வரும் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Post a Comment

 
Top