0
தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள வீதிகளையும், கால்வாய்களையும் பார்வையிட்டதுடன் அங்குள்ள ஒழுங்கற்ற வீதிகள், கால்வாய்களை புனர்நிர்மானம் செய்வதற்கு  நடவடிக்கை எடுப்பதாகவும் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

அத்தோடு இப்பிரச்சினை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அதற்கான தீர்வினை விரைவில் பெற்றுத் தருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.



Post a Comment

 
Top