0
சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் முறையாக ஸ்கைப் வசதியை பயன்படுத்தி வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் ஓடைக்கல் அடைக்கல மாதா ஆலயத்தில் இன்று திருமணம் நடத்த பொலிஸ் பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விடுமுறை நாளான நேற்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரிக்க வேண்டிய நீதிபதி எஸ்.வைத்தியநாதன், சென்னையில் இருந்ததால், வழக்கை வீடியோ கான்பரன்சிங்கில் விசாரிக்குமாறு நீதிபதி ராமசுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, அந்த மனுவை இ-மெயில் மூலம் படித்து முடித்த நீதிபதிக்கு உயர் நீதிமன்ற கிளை வீடியோ கான்பரன்சிங் அறையில் இருந்து, ஸ்கைப் வசதி மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நீதிபதி ஸ்கைப் வழியாக இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பினரிடமும் சில கேள்விகளை எழுப்பி பதில் பெற்றுள்ளார்.
சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பின், இன்று கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் நடத்தவும், பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நீதிபதி பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதியின் உதவியாளர்கள் உடனடியாக தட்டச்சு செய்து மனுதாரர் வழக்கறிஞரிடம் அளித்துள்ளனர்.

Post a Comment

 
Top