0


  (செய்தியாளர்.முகுந்தன்)
தொடர்ச்சியாக    பெய்துவரும்  அடைமழை  காரணமாக  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து குறித்த ஊர் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும்  வேலைக்கு செல்வது மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வது போன்ற பல விடயங்களில் அவர்கள் பாதிப்புறுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும்  அப் பிரதேச மக்கள் தெரிவிக்கையில் பெய்துவரும் மழை நீர்  அனைத்தும் குறித்த இடத்தின் வீதிகள் வீடுகள் மூள்கியுள்ளதாகவும்  இதனால் வெள்ளநீரானது ஓடுவதற்குரிய கால்வாய்கள் எதுவும் இன்றி தேங்கி நிற்பதாகவும்  தெரிவித்தனர்.

வந்தாறுமூலை கிழக்கு கிராம சேவகர்  பிரிவுக்குட்பட்ட பெரியதம்பிரான் வீதி மாங்காட்டு வட்டை என்று  சொல்லப்படுகின்ற இவ் இடமானது பலவருடங்களாக  இதைப்போன்றே மழையை சந்தித்தல் உடனே இன் நிலமானது  மழைநீரில்  மூழ்குவதும் நாங்கள் பெரும் அவலநிலையை சந்திப்பதும் இது பழகிப்போனது என்றும் எனவே உரிய அதிகாரிகள் இதை கவனம் எடுத்து எமக்கு முதலில் தேங்கியுள்ள  வெள்ள நீரை  ஏதாவது ஒரு வழியால் ஓடச்செய்து தரவேண்டும்   எனவும் அவர்கள் மேலும் மேலும் கேட்டுக்கொண்டனர்.
     







Post a Comment

 
Top