0



வவுனியா, பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் இன்றைய தினம் மேலும் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீடியாபாம், கந்தசாமிநகர், பாவற்குளம் படிவம்1, பாவற்குளம் படிவம்2, மெனிக்பாம், கிறிஸ்தவகுளம் உள்ளிட்ட பகுதி மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாவற்குளம் திறக்கப்பட்டமையால் செட்டிகுளம்- பூவரசங்குளம் வீதி, செட்டிகுளம் - நெளுக்குளம் வீதி என்பன வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

தொடர்ந்தும் மழை பெய்வதால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதுடன் மீள்குடியேறிய மக்கள் பலர் அவலங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Post a Comment

 
Top