0
(செய்தியாளர்.மூலையூரான்)
வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய பழையமாணவர் சங்கப் பொதுக்கூட்டமானது வித்தியாலய பிரதான மண்டபத்தில் அதிபர் மோகன்  தலைமையில் 15.11.2015 இன்று சரியாக 03.00 மணியளவில் ஆரம்பமானது.

முதல் நிகழ்வாக  இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு அதிபர் அவர்களின் தலைமையுரையை தொடர்ந்து  புதிய நிர்வாக சபை  தெரிவு  இடம்பெற்றது. இவ் நிர்வாக சபையில் பதவிவழியாக பாடசாலை அதிபர்  அவர்கள் தலைவராகவும்  உபதலைவராக பூ.தரிசுதன் அவர்களும்  செயலாளராக த.நிமலன்  அவர்களும் பொருளாளராக கௌ.கிரிடாங்கன் அவர்களும் மற்றும் ஏனைய பதவிகளுக்கும் தெரிவுகள்  இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து இப் பாடசாலையின் பழைய மாணவரும் கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய  திரு. பொ.சிவகுரு அவர்கள் உரை, உபதலைவர்,பொருளாளர்,செயலாளர் ஆகியோரின்  உரைகள் இடம்பெற்று தொடர்சியாக பாடசாலை அபிவிருத்தி சம்மந்தமாக  பழையமாணவர்களின்   கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டு இறுதியாக செயலாளர் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவெய்தியது.

இக் கூட்டத்தில்  100க்கு மேற்பட்ட பழையமாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.










Post a Comment

 
Top